நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்: 90 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது
நாடு முழுவதும் வருகிற 20-ந் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்க இருப்பதாகவும், இதையொட்டி 90 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது எனவும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் குல்தரன்சிங் அட்வால் கூறினார்.
நாமக்கல்,
நாடு முழுவதும் டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 20-ந் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆலோசிக்க நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் குல்தரன்சிங் அட்வால் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாடு முழுவதும் சுங்க கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை குறைக்கவேண்டும். டீசல் மீதான வரியை குறைக்கவேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்த போராட்டம் தொடங்கும் பட்சத்தில் நாடுமுழுவதும் 90 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு நாள்ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருமானம் கிடைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு மாறாக லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆண்டொன்றுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை முன்கூட்டியே செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை இந்தியா முழுவதும் கைவிடும் வரை எங்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும். இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு வாகன உரிமையாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் ஆதரவு கேட்டுள்ளோம்.
எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு இடம் கொடுக்காமல் எங்களை அழைத்துப்பேச வேண்டும். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். இதில் சுமுகதீர்வு காணாதபட்சத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடக்கும். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதை லாரி உரிமையாளர்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சம்மேளன தலைவர் குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளோம். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் 4½ லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்காது.
போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அனைத்து விதமான வாகனங்களையும் 22-ந் தேதி ஒருநாள் மட்டும் இயக்கவேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம். இந்த போராட்டம் மூலம் அரசுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்ற அடிப்படையில், இந்த போராட்டத்தை வலுவான முறையில் முன்னெடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேலு, தமிழகம் முழுவதும் 5,643 லாரி புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. இவை அனைத்திலும் வருகிற 15-ந் தேதி முதல் வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு சரக்கு புக்கிங் செய்வது நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்றார். இறுதியாக வேலைநிறுத்தம் தொடர்பான துண்டு பிரசுரங்களை குல்தரன்சிங் அட்வால் வெளியிட்டார்.
இந்த கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சண்முகப்பா, தென்மண்டல துணைத்தலைவர் ஹரீஸ் சபர்வால், வடக்கு மண்டல துணைத்தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் தன்ராஜ், பொருளாளர் சீரங்கன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வாங்கிலி, தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பொன்னம்பலம், நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தரராஜன் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story