கவர்னர் தனித்து செயல்படுவதை நிறுத்த வேண்டும் நாராயணசாமி பேட்டி
புதுவைக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பொருந்தும். எனவே கவர்னர் தனித்து செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
யூனியன் பிரதேசங்களில் அதிகாரம் யாருக்கு? என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியுள்ளது.
இதில் பல முக்கியமான அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பு புதுவை மாநிலத்துக்கும் பொருந்தும்.
நான் முதல்-அமைச்சர் ஆனது முதல் கடந்த 2 வருடங்களாக கவர்னர் அமைச்சரவையின் பரிந்துரைப்படிதான் செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டி வருகிறேன்.
இதுதொடர்பாக கவர்னருக்கு 19 முறை கடிதம் எழுதினேன். அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்த கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றேன். மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பார்வையிடலாம். ஆனால் கவர்னருக்கு உத்தரவு போட அதிகாரம் இல்லை. கொள்கை முடிவுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பலாம்.
தனித்து முடிவு எடுக்கவும், அமைச்சரவை முடிவில் தலையிடவும் கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தடையாக இருக்க கூடாது என்றும் கூறியிருந்தேன். இவை அனைத்தும் தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது.
டெல்லியை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு, நிர்வாகம், நிலம், நிதி போன்றவை மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளது. ஆனால் புதுவையில் அவை மாநில அரசின் அதிகாரத்திலேயே உள்ளது.
அரசியல் சாசன சட்டப்படி தேர்தல் முடிந்து சட்டமன்றம் அமைந்துவிட்டால் அதிகாரம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வந்துவிடும்.
கவர்னர் அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும். அமைச்சரவை முடிவு எடுத்து கோப்புகளை அனுப்பும்போது எந்த காரணத்தையும் கூறி திருப்பி அனுப்ப அதிகாரம் இல்லை. கவர்னருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது.
புதுவை கவர்னர் கிரண்பெடியின் செயல்பாடு தொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
மக்களுக்கு எங்கள் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான கோப்புகளை காலம்தாழ்த்தி அதிகாரத்தை கையில் எடுக்க நினைத்தார்கள். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு கோப்புகளில் ஏதாவது விளக்கம் தேவை என்றால் அரசு செயலாளர்களை அழைத்து பேசலாம். அதுவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கலந்துபேசிவிட்டு தான் அரசு செயலாளர்கள் விளக்கம் அளிக்கவேண்டும்.
இதுதொடர்பாக ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு அரசு செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். மத்திய அரசிடம் இருந்து எந்த கடிதம் வந்தாலும் உடனே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளேன்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை கவர்னர் உள்பட யார் மீறினாலும் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பேன்.
கடந்த 2 வருடமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான மரியாதையை குலைக்கும் விதமாக கவர்னர் செயல்பட்டு வந்தார். இனிமேல் அவர் தனித்து செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீதிமன்ற தீர்ப்பினை கவர்னர் மதிப்பார் என்று நினைக்கிறேன்.
கவர்னருடன் எங்களுடன் அதிகார போட்டி இல்லை. ஒருவர் அதிகாரத்தில் மற்றவர் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே கூறி இருந்தேன். மக்கள் அரசின் உரிமையை தடுத்தால் தொடர்ந்து எதிர்ப்போம். சமூக வலைதளங்களில் வரும் உத்தரவின்படி செயல்பட்டால் அந்த அதிகாரிகள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Tags :
Next Story