தனியார் வர்த்தக நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி சென்னையை சேர்ந்த 2 பேருக்கு வலைவீச்சு
தனியார் வர்த்தக நிறுவனத்துக்கு குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
எரியோடு அருகேயுள்ள பண்ணைப்பட்டியை சேர்ந்த வேலுசாமி மகன் சுப்பிரமணி. இவர் ஆன்லைன் மூலம் தங்கம், வெள்ளி வாங்கி விற்கும் வர்த்தக நிறுவனம் நடத்தினார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை ரெட்டேரி விநாயகாபுரத்தை சேர்ந்த குணசேகரன், செல்வம் ஆகியோர் சுப்பிரமணிக்கு அறிமுகம் ஆகினர்.
இதில் குணசேகரன் சென்னையில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இதற்கிடையே சுப்பிரமணியை தொடர்பு கொண்டு 2 பேரும் பேசினர். அப்போது சுப்பிரமணி தங்கம், வெள்ளி வாங்குவதை அறிந்தனர். பின்னர் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக 2 பேரும் கூறினர். அதை உண்மை என நம்பிய சுப்பிரமணி, அவர் களிடம் தங்கம் வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
உடனே குணசேகரன், தனது வங்கி கணக்கில் ரூ.70 லட்சத்தை செலுத்தும்படி கூறியிருக்கிறார். அதன்படி அவருடைய வங்கி கணக்கில் சுப்பிரமணி ரூ.70 லட்சத்தை செலுத்தினார். ஆனால், பேசியபடி தங்கத்தை வாங்கி கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது காலம் கடத்தி வந்தனர்.
மேலும் பணத்தை திரும்ப கேட்ட சுப்பிரமணியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் சுப்பிரமணி புகார் செய்தார்.
அதன்பேரில் செல்வம், குணசேகரன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரூ.70 லட்சம் மோசடி செய்த 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story