வம்பாகீரப்பாளையத்தில் மின்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
புதுச்சேரி மின்துறை அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மின்துறை தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி மின்துறை அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், வேல்முருகன், மதிவாணன், பக்தவச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதுவை மின்துறையில் 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது, அதில் இருந்த ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சிபாரிசு செய்த ஊதியத்தை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தால் மின்துறையில் நேற்று பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story