ஜெருசலேம் புனித பயணத்துக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா தகவல்
ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த புனித பயணம் இந்த மாதம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயண காலம் 10 நாட்கள் வரை இருக்கும். நெல்லை மாவட்டத்தில் புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெறலாம். இதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் தபால் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்“ என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, (5-வது தளம்), அண்ணாசாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு நாளை (வெள்ளிக்்கிழமை) மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story