மும்பை நகர் மற்றும் மத்திய புறநகருக்கு தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்த ரூ.1,875 கோடி செலவில் புதிய திட்டம்


மும்பை நகர் மற்றும் மத்திய புறநகருக்கு தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்த ரூ.1,875 கோடி செலவில் புதிய திட்டம்
x
தினத்தந்தி 5 July 2018 4:02 AM IST (Updated: 5 July 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

மும்பை நகர் மற்றும் மத்திய புறநகர் பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்த ரூ.1,875 கோடி செலவில் புதிய திட்டத்தை 6 ஆண்டுகளில் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

மும்பை, 

மும்பை நகர் மற்றும் மத்திய புறநகர் பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்த ரூ.1,875 கோடி செலவில் புதிய திட்டத்தை 6 ஆண்டுகளில் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

குடிநீர் வினியோகம்

மும்பை பெருநகர மக்களுக்கு மாநகராட்சி ஏரிகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து வினியோகம் செய்து வருகிறது. இந்தநிலையில் மத்திய புறநகர் மற்றும் நகர பகுதிகளில் தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்த மாநகராட்சி இரண்டு புதிய திட்டங்களை ரூ.1,875 கோடி செலவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி செம்பூர்- டிராம்பே மற்றும் செம்பூர்- வடலா- பரேல் இடையே பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு இந்த பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.

6 ஆண்டுகளில்...

இந்த திட்டத்தின்படி செம்பூர் ஹெக்டேவர் மைதானத்தில் இருந்து வடலா பிரதிக்சா நகர் வழியாக பரேல் சதாகாந்த் மைதானம் வரையில் பூமிக்கடியில் 2.5 மீட்டர் அகலத்தில் 9.7 கி.மீ. தூரத்துக்கும், செம்பூர்- டிராம்பே இடையே 2.5 மீட்டர் அகலத்தில் 5.5 கி.மீ. தூரத்துக்கும் பூமிக்கடியில் ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

செம்பூர்- வடலா- பரேல் இடையே பதிக்கப்படும் குடிநீர் குழாய்கள் மூலம் சயான், மாட்டுங்கா, வடலா, பரேல், சிவ்ரி, நய்காவ் உள்ளிட்ட நகர பகுதிகள், செம்பூர்- டிராம்பே திட்டத்தின் மூலம் செம்பூர், கோவண்டி, மான்கூர்டு உள்ளிட்ட மத்திய புறநகர் பகுதிகள் சீரான குடிநீர் வினியோகம் பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டத்துக்கான ஒப்புதல் கிடைத்ததும் பணிகளை தொடங்கி 6 ஆண்டுகளில் விரைந்து செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

Next Story