திருநெல்வேலி- காந்திதாம் இடையே வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகம் இன்று முதல் சேவை தொடங்குகிறது


திருநெல்வேலி- காந்திதாம் இடையே வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகம் இன்று முதல் சேவை தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

ன்வெல், வசாய்ரோடு வழியாக திருநெல்வேலி- காந்திதாம் இடையே வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.

மும்பை, 

பன்வெல், வசாய்ரோடு வழியாக திருநெல்வேலி- காந்திதாம் இடையே வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.

ஹம்சபர் ரெயில் சேவை

திருநெல்வேலி- காந்திதாம் இடையே வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைைய ரெயில்வே அறிமுகம் செய்து உள்ளது. இந்த ரெயில் சேவையை இன்று (வியாழக்கிழமை) குஜராத் மாநிலம் காந்திதாம் ரெயில் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோகாய்ன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இந்த ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

பின்னர் திருநெல்வேலியில் இருந்து இந்த வாராந்திர ரெயில் சேவை வருகிற 8-ந்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது. அந்த ரெயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு 3-வது நாள் மதியம் 12 மணிக்கு காந்திதாமை சென்றடையும்.

16-ந் தேதி முதல்...

பின்னர் வழக்கமாக வருகிற 16-ந் தேதி முதல் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் காந்திதாமில் இருந்து திருநெல்வேலிக்கு 19424 என்ற எண்ணிலும், 19-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருெநல்வேலியில் இருந்து காந்திதாமுக்கு 19423 என்ற எண்ணிலும் ஹம்சபர் வாராந்திர ரெயில் இயக்கப்படும்.

காந்திதாமில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ஹம்சபர் ரெயில் 3-வது நாள் காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் 3-வது நாள் அதிகாலை 5.45 மணிக்கு காந்திதாமை சென்றடையும்.

நின்று செல்லும் இடங்கள்

இந்த ரெயில் இருமார்க்கத்திலும் ஆமதாபாத், வதோதரா ஜங்ஷன், சூரத், வசாய்ரோடு, பன்வெல், ரத்னகிரி, மட்காவ் ஜங்ஷன், கர்வார், மங்களூரு ஜங்ஷன், கோழிக்கோடு, சோரனூர் ஜங்ஷன், எர்ணாகுளம் ஜங்ஷன், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் 16 ஏ.சி. பெட்டிகள், பேண்டிரி கார் உள்பட 19 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

இந்த தகவலை கொங்கன் ரெயில்வே தலைமை செய்தி தொடர்பு அதிகாரி எல்.கே.வர்மா தெரிவித்துள்ளார்.

Next Story