விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் தி.மு.க. விவசாய அணி கோரிக்கை


விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் தி.மு.க. விவசாய அணி கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2018 3:45 AM IST (Updated: 5 July 2018 11:33 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தி.மு.க. விவசாய அணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதை தொடர்ந்து கதிர் பருவத்தில் நெற்பயிர்கள் அனைத்தும் சாவியாகி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உடனடியாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பிரீமியம் செலுத்தியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதால் கிராமப்புற ஏழை எளிய தொழிலாளர்கள் வேலையில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் 100 நாள் வேலை திட்டப்பணிகளை தொடங்க வேண்டும்.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அரிசி மோசமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினி மூலம் பட்டா திருத்தம் செய்யும் பணிகளை பிர்க்கா வாரியாக மேற்கொள்ளவேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் துணை அமைப்பாளர் ஆப்பனூர் குருசாமி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Next Story