இயற்கை எரிவாயு எடுக்கும் பணிக்கு பயன்படுத்த இருந்த குழாய்களுக்கு தீ வைப்பு ரூ.40 லட்சம் சேதம்
திருவாரூர் அருகே இயற்கை எரிவாயு எடுக்கும் பணிக்கு பயன்படுத்த இருந்த குழாய்களுக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ.40 லட்சம் சேதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்,
இந்திய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் எனப்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கெயில் நிறுவனம் ஆகியவை தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த பணிகளுக்காக ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனங்கள், காவிரி டெல்டாவின் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து உள்ளன. விளை நிலங்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுத்து செல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளால் விவசாயத்துக்கும், நிலத்தடி நீர் ஆதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதால், ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்களின் பணிகளுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்த பணிகளை கைவிடுவதுடன், காவிரி டெல்டாவை விட்டு ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் நிலத்துக்கு அடியில் உள்ள இயற்கை எரிவாயுவை எடுத்து, அதை சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் பல இடங்களில் குழாய்களை பதித்துள்ளது.
திருவாரூர் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கு கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கருப்பூரில் உள்ள விளை நிலங்களில் குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்ள ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் கருப்பூர் வயல் பகுதியில் 20 குழாய்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. இந்த குழாய்களை நிலத்துக்கு அடியில் பதிப்பதற்காக நேற்று காலை தொழிலாளர்கள், குழாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்றனர்.
அப்போது குழாய்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, கருகி கிடந்தன. வயல்களிலும் தீ பரவியதற்கான தடயங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், ஒப்பந்த நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் சீனிவாசன் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அப்போது கெயில் நிறுவன அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக சம்பவ இடத்துக்கு சென்று தீ வைத்து எரிக்கப்பட்ட குழாய்களை போலீசார் பார்வையிட்டனர்.
சேதம் அடைந்த குழாய்களின் மதிப்பு ரூ.40 லட்சம் என தெரிகிறது. இவை இரும்பு குழாய்கள் ஆகும். குழாய்களின் மேல் பகுதியில் பிளாஸ்டிக் லேயர் இருந்துள்ளது. இதைத்தான் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இயற்கை எரிவாயு எடுக்கும் பணிக்கு பயன்படுத்த இருந்த குழாய்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனங்களின் பணிகளுக்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் குழாய்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story