சமீபத்தில் பெய்த மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
சமீபத்தில் பெய்த மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள குளங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். அப்போது புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள புது குளம், பல்லவன் குளம், அடப்பன்குளம், புதுஅரண்மனை குளம், மேலநன்னாரிகுளம் உள்ளிட்ட குளங்களில் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதை தொடர்ந்து ஏரிகள் மற்றும் குளங்களில் மழைநீர் சேகரிக்கப்படுகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பல்வேறு துறைகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்ட பணிகளால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.15 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இது வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள புதுகுளம், பல்லவன்குளம், அடப்பன்குளம், புது அரண்மனை குளம், மேலநன்னாரிகுளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. இந்த குளங்களில் இருந்து நீர் கசிவுகள் ஏற்படாத வகையில் அவ்வப்போது பார்வையிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மழைநீருடன் கழிவுநீர் எந்த வகையிலும் கலக்காமல் இருக்க கண்காணித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் குளங்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்துவதுடன் இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் குளங்களில் சேராத வகையிலும் நட வடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story