தண்ணீர் திறப்பை விட வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 8 அடி உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகளவு இருப்பதால் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 8 அடி உயர்ந்தது.
மேட்டூர்,
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் கைகொடுக்காத நிலையில் கேரளா மற்றும் கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதி கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் கேரளாவில் மழை தீவிரம் அடைந்துள்ளதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல் கர்நாடகத்தில் மழை தீவிரம் அடையும் நேரங்களில் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அந்த அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.
இதனால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து மேட்டூரை வந்தடைந்தது. எனவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 29-ந்தேதி வினாடிக்கு 1,553 கனஅடி தண்ணீரும், 1-ந்தேதி வினாடிக்கு 10,383 கனஅடி தண்ணீரும், 2-ந்தேதி 18,824 கனஅடியும், 3-ந்தேதி 10,792 கனஅடியும், நேற்று முன்தினம் 7,007 கனஅடியும், நேற்று 5,908 கனஅடி தண்ணீரும் வந்தது.
அணைக்கு வந்த தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால் அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி நீர்மட்டம் 54.71 அடியாக உயர்ந்தது. கடந்த 2-ந்தேதி அணையில் 60.30 அடி தண்ணீர் இருந்தது.
நேற்று காலை 8 மணிக்கு அணை நீர்மட்டம் 62.59 அடியாக உயர்ந்தது. 10 நாட்களில் அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு கடந்த சில நாட்களுக்கு முன் 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால் நீர்மட்டமும் வேகமாக உயரும்.

Related Tags :
Next Story