பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை ஒழுங்குபடுத்த வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை
பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்துக்கட்டுவதை விடுத்து, அதை ஒழுங்குபடுத்த வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதற்கும், விற்பதற்கும் தடை விதித்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இத்திட்டத்தை வரவேற்றாலும், நடைமுறைபடுத்துவது சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய நிலையில் மக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பழக்கப்பட்டு விட்டனர். மேலும், தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்களுக்கான இந்தத் தடையானது சில்லரை வணிகர்கள் கடைகளில் விற்பனை செய்யும் மளிகைப் பொருட்களை குறிவைத்து இருக்கிறதே தவிர, அன்னிய நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்துவதாக இல்லை. எனவே 51 மைக்ரானுக்கு அதிகமான தடிமனில் உள்ள பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற மத்திய அரசின் சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்துக்கட்டுவதை விடுத்து, அதை சரியான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story