வாக்குச்சாவடி மையங்கள் மறுவரையறை குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுவரையறை குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், உதவி கலெக்டர்கள் சிவனருள், டெய்சிகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் 1,450 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு நகர்புற பகுதிகளில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள பாகங்களையும், கிராமப்புற பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள பாகங்களையும் பிரித்து புதிய வாக்குச்சாவடிகளை ஏற்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் 44 வாக்குச்சாவடிகள் புதிதாக பிரிப்பதற்கு ஏற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினரின் கருத்துக்கள், கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிகளின் அடிப்படையில் வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கான முன்மொழிவு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு பரிந்துரை செய்யப்படும் முன்மொழிவு சென்னை தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்படும்.
கூடுதல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து கூடுதல் வாக்குசாவடி மையங்கள் உருவாக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இதுகுறித்து ஆட்சேபணைகளை வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், தாசில்தார்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story