திருவாரூரில் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
ஊராட்சி செயலாளருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதை கைவிட வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி வேலை நிறுத்த போராட்டம் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட செயலாளர் வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், அனைத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தர்மராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 900 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story