போக்குவரத்து விதிகளை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
தமிழகத்தில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக மினிபஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், அதிக சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அடிப்படை சாலை விதியை மீறுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஆட்டோ டிரைவர்கள் சாலை விதியை பின்பற்றாமல் செல்கின்றனர். இவர்கள் அதிக பயணிகளை ஏற்றிச்செல்வதுடன், சாலையின் நடுவில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகன ஓட்டுனர்கள் சாலை விதியை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
பின்னால் வரும் வாகனங்கள் அவற்றில் மோதி விபத்து ஏற்படுகிறது. ஓட்டுனர்களும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
சாலை விதிமீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் பல்வேறு வழிகாட்டுதல்களை கூறியுள்ளன. இருப்பினும் அந்த வழிகாட்டுதல்களை போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை. எனவே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும்,
செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும், சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டின் வழிகாட்டுதல்கள் தொடர்பாக ஊடகங்களில் பிரசாரம் செய்ய வேண்டும், இதுதொடர்பாக சாலை சந்திப்புகளிலும், மதுபான கூடங்களிலும் பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டும். 3-வது முறையாக விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக 1988-ம் ஆண்டின் மோட்டார் வாகன விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story