கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
பல மாவட்டங்களில் ஊழியர்களை எவ்வித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் புதிய கணினி உதவியாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 3-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக ஊரக வளாச்சித்துறையை சேர்ந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் காந்திமதிநாதன், மில்கிராஜாசிங், சந்தானம், மகேந்திரன், மீராகண்ணன் உள்பட பலர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
3-ம் நாளான நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர், அச்சரப்பாக்கம், திருக்கழுகுன்றம், உத்திரமேரூர் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் வளர்ச்சி பணிகள், திட்டப்பணிகள் ஊராட்சிகளிலுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் பணிகள் முடங்கி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Tags :
Next Story