காஞ்சீபுரத்தில் 4-வது தேசிய கைத்தறி கணக்கெடுப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது


காஞ்சீபுரத்தில் 4-வது தேசிய கைத்தறி கணக்கெடுப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது
x
தினத்தந்தி 6 July 2018 5:15 AM IST (Updated: 6 July 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

4-வது தேசிய கைத்தறி கணக்கெடுப்பு பணி காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

காஞ்சீபுரம்,

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குனரும், காஞ்சீபுரம் மாவட்ட கைத்தறி துறை உயர் அதிகாரியுமான செல்வம் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

4-வது தேசிய கைத்தறி கணக்கெடுப்பு பணி காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கான மத்திய அரசின் வரையறை கீழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கைத்தறி மற்றும் அதன் தொடர்புடைய நெசவுக்கு முந்தைய பணி செய்தல், டப்பாவில் பாவு நூல் சுற்றுதல், தார் சுற்றுதல், அச்சு பிணைத்தல், வடிவமைப்பு நெசவு நெய்தல், நெசவுக்கு பிந்தைய பணிகளில் தரம் சரிபார்த்தல், துணி மடித்தல் போன்றவற்றை கடந்த ஆண்டு செய்து இருக்க வேண்டும்.

மேற்கண்ட வரையறையின் கீழ், தகுதி பெற்ற நெசவாளர்கள் இதுநாள் வரை, இந்த கணக்கெடுப்பில் தங்களது பெயரை பதிவு செய்யாமல் இருந்தால், தற்போது, நமது பகுதியில் நடைபெற்று வரும் கைத்தறி கணக்கெடுப்பின் கீழ் தங்களது பெயரை தவறாமல் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story