அரசுக்கு எதிராக போராடும் இயக்கங்களை கண்காணிக்க போலீஸ் தனிப்படை
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராடும் இயக்கங்களை கண்காணிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே சேலத்தில் 8 வழிச்சாலை அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சாலை திட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்தது. எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இயக்கங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும் மாவோயிஸ்டுகள் பிரச்சினை இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராகும் இயக்கங்களை கண்காணிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராடும் இயக்கங்கள், போராட்டங்களை நடத்த மக்களை திரட்டும் இயக்கங் களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல் பொதுமக்கள் பங்கேற்கும் போராட்டங்களில் மாவோயிஸ்டுகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கலந்து கொள்கிறார்களா? என்றும் கண்காணிக்கின்றனர்.

Related Tags :
Next Story