காரைக்குடி அருகே கூடை பின்னும் தொழிலில் அசத்தும் பெண்கள்
காரைக்குடி அருகே வீடுகளில் குடிசை தொழிலாக பெண்கள் கூடை பின்னும் தொழிலை செய்து அசத்தி வருகின்றனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ளது ஆத்தங்குடி. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுற்றுலா பகுதியாக உள்ள இங்கு பிரமாண்டமான வீடு மற்றும் புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த பிரமாண்டமான வீட்டை பார்ப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய புகழ்பெற்ற ஊரில் டைல்ஸ் தயாரிக்கும் பணிக்கு அடுத்தபடியாக சிறந்து விளங்குவது வயல் கூடைகள் முடைவது. இங்குள்ள வீடுகளில் பெண்கள் குடிசை தொழிலாக கூடை பின்னும் தொழிலை செய்து வருகின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலை செய்து வருகின்றனர். பல வண்ண, வண்ண நிறங்களில் இந்த கூடைகள் பின்னப்பட்டு அவை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் அனைவரும் குழுவாக ஒன்றிணைந்து இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தெய்வானை ஆச்சி கூறியதாவது:- தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு வீட்டில் உள்ள குடும்ப தலைவர்-தலைவி 2 பேருமே சம்பாதித்தால் தான் வாழ்க்கையை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. இப்பகுதி பெண்கள் வீட்டில் சிறு, சிறு தொழில் செய்து குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு கூடை பின்னும் தொழிலை செய்து வருகிறோம். சிறிய கூடையில் இருந்து வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு பயன்படும் கூடைகள், பூ மாடல் கூடைகள், மதிய உணவு எடுத்து செல்லும் வகையில் அமைந்துள்ள கூடைகள், கோவில்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பூஜை பொருட்கள் மற்றும் அர்ச்சனை கூடைகள், திருமணம், பூப்புனித நீராட்டு உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு பயன்படுத்தப்படும் கூடைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு கூடைகளை தயார் செய்து வருகிறோம். இந்த கூடைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உபரி மற்றும் மூலதன பொருட்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெறப்பட்டு பின்னர் அதை கொண்டு இந்த வண்ண, வண்ண வகையான கூடைகள் இங்கு தயார் செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாராகும் கூடைகள் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பாலீத்தின் போன்ற மக்கா பொருட்களை மக்கள் பயன்படுத்துவதற்கு அரசு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து அவற்றை ஒழித்து வருகிறது. ஆனால் எங்களிடம் நார் மூலம் தயாரிக்கப்படும் இந்த கூடைகள் சுமார் 20 ஆண்டிற்கும் மேல் நீடித்து உழைக்கும். இவை எளிதில் மக்கும் தன்மை கொண்டது. எனவே இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் இதைப்போன்று கூடைகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கினாலே பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்கலாம். தமிழக அரசு எங்களை போன்று குடிசை தொழில் செய்து வரும் பெண்களுக்கு மானியம் அளித்தால் இந்த தொழிலை இன்னும் விரிவுப்படுத்தி அதிக பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story