6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் நகைக்கடை ஊழியர் கைது


6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் நகைக்கடை ஊழியர் கைது
x
தினத்தந்தி 6 July 2018 4:51 AM IST (Updated: 6 July 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நகைக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே உள்ள பெரியகொசப்பள்ளத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் குமரேசன்(வயது 23). இவர் பெண்ணாடத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்த குமரேசனின் மனைவிக்கு கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவர், பக்கத்து கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது 6 வயது மகளை குமரேசனின் வீட்டில் விட்டுச்சென்றார்.

அப்போது அந்த சிறுமியை குமரேசன் பாலியல் பலாத்காரம் செய்தார். உடனே வலிதாங்க முடியாமல் சிறுமி சத்தமிட்டாள். ஆனால் அவளது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. அந்த சமயத்தில் சிறுமியின் பாட்டி அங்கு வந்தார். சிறுமியின் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்த பாட்டி, குமரேசனின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே குமரேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து காயமடைந்த சிறுமிக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story