மாவட்ட செய்திகள்

கூட்டுறவு நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Co-operative settlement workers demonstrated

கூட்டுறவு நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விரைவுபோக்குவரத்து கழக மாவட்ட பொறுப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிமணி கலந்துகொண்டு பேசினார்.

நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும்.சம வேலைக்கு சம ஊதியமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவேண்டும். ஊழியர்களை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அரசு ஊழியர்களுக்குரிய ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். எடை குறைவு இல்லாமல் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.