டெங்கு தடுப்பு உறுதிமொழி


டெங்கு தடுப்பு உறுதிமொழி
x
தினத்தந்தி 7 July 2018 4:00 AM IST (Updated: 7 July 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு உறுதிமொழி நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு உறுதிமொழி செங்கழுநீரோடைவீதி தெருவில் நடந்தது. இதற்கு காஞ்சீபுரம் நகராட்சி ஆணையரும், தனி அதிகாரியுமான சர்தார் தலைமை வகித்தார். இதில், காஞ்சீபுரம் நகர்நல அலுவலர் டாக்டர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டு, டெங்கு தடுப்பு உறுதிமொழியை ஏற்றனர். 

பின்னர் காஞ்சீபுரம் ராயன்குட்டை தெரு, செட்டிக்குளம், தாமல்வார் தெரு, ஜவஹர்லால் தெரு, காமாட்சியம்மன் காலனி போன்ற பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Next Story