மாவட்ட செய்திகள்

குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை முன்னாள் மந்திரி அம்பரீஷ் சொல்கிறார் + "||" + There are no new projects in the Karnataka budget Ambresh says

குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை முன்னாள் மந்திரி அம்பரீஷ் சொல்கிறார்

குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை முன்னாள் மந்திரி அம்பரீஷ் சொல்கிறார்
குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று முன்னாள் மந்திரி அம்பரீஷ் கூறினார்.

மண்டியா,

குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று முன்னாள் மந்திரி அம்பரீஷ் கூறினார்.

ரூ.400 கோடி

மண்டியாவில் நேற்று நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக குறைந்தது ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் ரூ.162 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மண்டியா மாவட்ட மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

சுற்றுலாத்துறை மற்றும் தொழில் துறைக்காவது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

2 மட்டும்தான் புதிய திட்டங்கள்

கே.ஆர்.எஸ். அணை அருகே அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, சித்தராமையா முதல்–மந்திரியாக இருந்தபோது அறிவிக்கப்பட்டதுதான். அதைத்தான் குமாரசாமியும் அறிவித்துள்ளார். ககனசுக்கி நீரீவீழ்ச்சி சுற்றுலா தலத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்.

மண்டியாவில் உள்ள மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும், கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை போக்க, குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது 2 மட்டும்தான் மண்டியா மாவட்டத்திற்கு கிடைத்துள்ள புதிய திட்டங்கள் ஆகும்.

இவ்வாறு அம்பரீஷ் கூறினார்.