மாவட்ட செய்திகள்

லால்பாக் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்ததுகடும் போக்குவரத்து நெரிசல் + "||" + Larry dies in Lalpag Heavy traffic

லால்பாக் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்ததுகடும் போக்குவரத்து நெரிசல்

லால்பாக் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்ததுகடும் போக்குவரத்து நெரிசல்
மும்பை லால்பாக் மேம் பாலத்தில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பை, 

மும்பை லால்பாக் மேம் பாலத்தில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

லாரி கவிழ்ந்தது

மும்பை பைகுல்லா- பரேல் இடையே உள்ள லால்பாக் மேம்பாலத்தில் நேற்று காலை 10 மணியளவில் தென்மும்பை யில் இருந்து சயான் நோக்கி மினரல் வாட்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி பாலத்தின் மைய பகுதியில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதனால் அந்த வழியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாலத்தில் கவிழ்ந்து கிடந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்த விபத்தால் நேற்று லால்பாக் மேம்பால பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.