கொடைக்கானலில் குறிஞ்சி பூக்கள் ஆண்டாக கொண்டாட அரசு அனுமதி பெறப்படும்: கலெக்டர் தகவல்
கொடைக்கானலில் குறிஞ்சி பூக்கள் ஆண்டாக கொண்டாட அரசு அனுமதி பெறப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ரூ.4 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மலைக்கிராம மக்களுக்கு ஆதார்கார்டு, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், பட்டா உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் ரூ.70 லட்சம் செலவில் கவுஞ்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கேரட் கழுவும் எந்திர மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மன்னவனூர் கிராமத்தில் குளிர்பதன கிட்டங்கி, பூண்டு உலர் புகையூட்டு மையம் மற்றும் மீன் உணவு தயாரிக்கும் மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மோகன், தாசில்தார் பாஷியம் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குறிஞ்சி பூக்கள் அதிக அளவில் இந்த ஆண்டு பூத்துக் குலுங்கின்றன. எனவே இந்த ஆண்டை குறிஞ்சி பூக்கள் ஆண்டாக கொண்டாட அரசிடம் அனுமதி பெறப்படும். அதன் பின்னர் கொடைக்கானலில் 1 மாதத்துக்கு குறிஞ்சி பூக்கள் ஆண்டாக விழா கொண்டாடப்படும், என்றார்.
Related Tags :
Next Story