புதுச்சேரி, சென்னைக்கு வெங்கையா நாயுடு வருகையையொட்டி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு


புதுச்சேரி, சென்னைக்கு வெங்கையா நாயுடு வருகையையொட்டி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 July 2018 5:14 AM IST (Updated: 7 July 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி, சென்னைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர், 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் சென்னை, புதுச்சேரியில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் புதுச்சேரியில் தங்கி உள்ளார். அவர் வருகையையொட்டி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் கடலூர் மாவட்டம் கிள்ளை முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை படகில் சென்று கடற்கரையோரம் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தி, சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த ரோந்து பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறும் என்று கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

Next Story