வீடு, கடைகள் கட்டித்தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.1¾ கோடி மோசடி கட்டுமான அதிபர் சிக்கினார்
வீடு, கடைகள் கட்டித்தருவதாக கூறி, பொதுமக்களிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
வீடு, கடைகள் கட்டித்தருவதாக கூறி, பொதுமக்களிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் கைது செய்தனர்.
2 கடைகள்
நவிமும்பை சீவுட் பகுதியை சேர்ந்த பெண் ஹீனா சேக்(வயது33). இவர் கார்கர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணிகள் நடந்த கட்டிடத்தில் 2 கடைகள் வாங்க கட்டுமான அதிபர் ஒருவரை அணுகினார். மேலும் அவர் கடைக்கான பணத்தையும் கட்டுமான அதிபரிடம் கொடுத்துள்ளார். கட்டுமான அதிபர் நலின் ஷா (76) 2 வருடத்தில் கட்டிடத்தை கட்டி முடித்து கடைகளை ஒப்படைப்பதாக ஹீனா சேக்கிடம் தெரிவித்தார். ஆனால் 2 ஆண்டுகள் ஆன பிறகும் கட்டுமான பணிகள் முடியவில்லை.
இது குறித்து அவர் விசாரித்த போது, சிட்கோ அங்கு கட்டுமான பணிகள் நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது.
கட்டுமான அதிபர் கைது
இதனால் ஹீனா சேக் தான் கொடுத்த பணத்தை திருப்பிகேட்டு உள்ளார். இந்தநிலையில் நலின் ஷா திடீரென தலைமறைவு ஆனார். இதனால் பதறிப்போன ஹீனா சேக் சம்பவம் குறித்து வாஷி போலீசில் புகார் அளித்தார். இதுபோல மேலும் பலர் அவர் மீது புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், நலின் ஷா வீடு, கடைகள் கட்டித் தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.1 கோடியே 80 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story