மாவட்ட செய்திகள்

ஆரணியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு புதிய பஸ்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் + "||" + New buses from Arani to Chennai and Tirupur The Minister began to flag off

ஆரணியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு புதிய பஸ்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஆரணியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு புதிய பஸ்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஆரணியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு புதிய பஸ்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆரணி, 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை மண்டலம் சார்பாக ஆரணியில் இருந்து சென்னைக்கும், ஆரணியில் இருந்து திருப்பூருக்கும் புதிய பஸ்கள் தொடக்க விழா ஆரணி பழைய பஸ்நிலைய வளாகத்தில் நடந்தது.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் கே.செல்வகுமார் (வணிகம்), எஸ்.நடேசன் (தொழில்துறை), மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், உதவி கலெக்டர் எஸ்.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி போக்குவரத்து பணிமனை மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு சென்னைக்கு 2 புதிய பஸ்களையும், திருப்பூருக்கு ஒரு பஸ்சையும் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதையடுத்து புதிய பஸ்சில் அமைச்சர், கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சிறிது தூரம் பயணம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், சாந்திசேகர், கோவிந்தராசன், ஜெயலலிதா பேரவை நிர்வாகிபாரி பி.பாபு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பாசறைநிர்வாகி பி.ஜி.பாபு, மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை - சென்னை வழித்தடத்தில் செல்லும் 2 புதிய பஸ்களின் இயக்கத்தினை நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள், அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஸ்தபதி கோட்டீஸ்வரனிடம் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

அமைச்சருடன் திருப்பணிக்குழு நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.