மாவட்ட செய்திகள்

புல் அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் சாவு + "||" + Driver dies after falling into the well

புல் அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் சாவு

புல் அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் சாவு
சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கண்ணன் (வயது 36). இவர் தனியார் பள்ளி பஸ் டிரைவராக உள்ளார்.
சின்னமனூர், 

சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கண்ணன் (வயது 36). இவர் தனியார் பள்ளி பஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு கண்ணன் சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் படுகாயம் அடைந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.