மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + "||" + In Thoothukudi district Free training for unemployed youth

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

இலவச பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 13–ந்தேதி வரை திறன் மேம்பாட்டு பயிற்சி விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திறன் மேம்பாட்டு பயிற்சி மூலமாக எலக்ட்ரீசியன், ஆட்டோ மொபைல், செல்போன் சர்வீஸ் செய்தல், உணவு பதனிடுதல், தையல் பயிற்சி, மருந்தக உதவியாளர் பயிற்சி, ஆடை வடிவமைத்தல், அழகு கலைப்பயிற்சி மற்றும் கால்நடைத்துறை பயிற்சி தொடர்பான இலவச பயிற்சிகளுக்கான பதிவு முகாம் வருகிற 10–ந்தேதி நடக்க உள்ளது.

இளைஞர்கள்

இந்த பதிவு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இந்த பயிற்சி மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.