மாவட்ட செய்திகள்

மாம்பாக்கம், வேலஞ்சேரி ஊராட்சியில்அம்மா திட்ட முகாம் + "||" + Mambakkam, Velanchery Panchayat Mother planning camp

மாம்பாக்கம், வேலஞ்சேரி ஊராட்சியில்அம்மா திட்ட முகாம்

மாம்பாக்கம், வேலஞ்சேரி ஊராட்சியில்அம்மா திட்ட முகாம்
மாம்பாக்கம் மற்றும் வேலஞ்சேரி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மாம்பாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோ தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். தனி தாசில்தார் லதா, வருவாய் ஆய்வாளர் ஜானகி, கிராம நிர்வாக அதிகாரி குணசீலன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 14 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டன. அவற்றில் 3 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு தாசில்தார் இளங்கோ வழங்கினார். மீதம் உள்ள 11 மனுக்கள் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முடிவில் கிராம உதவியாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

திருத்தணி அருகில் உள்ள வேலஞ்சேரி ஊராட்சியில் நடந்த அம்மா திட்டமுகாமுக்கு திருத்தணி ஆர்.டி.ஓ. பவநந்தி தலைமை தாங்கினார். திருத்தணி தாசில்தார் செங்கலா வரவேற்றார். முகாமில் கோ.அரி எம்.பி., திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

பின்னர் 5 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ்களையும், மற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். முகாமில் பொதுமக்கள் அளித்த நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. பவநந்தி தெரிவித்தார்.

இந்த முகாமில் மாவட்ட ஆவின் பால் தலைவர் வேலஞ்சேரி சந்திரன், திருத்தணி நகராட்சி முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் இ.என்.கண்டிகை ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.டி.சீனிவாசன், வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் வினோத்்குமார் நன்றி கூறினார்.