நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு


நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 July 2018 9:30 PM GMT (Updated: 7 July 2018 7:34 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாங்குநேரி- வள்ளியூர்

நாங்குநேரி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கும் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இதேபோன்று கோட்டைக்கருங்குளம் மற்றும் திசையன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் தெற்கு கள்ளிகுளம், கஸ்தூரிரெங்கபுரம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், பார்க்கனேரி, முடவன்குளம், மிட்டாதார்குளம், கோட்டைக்கருங்குளம், வடிவம்மன்பட்டி, கும்பிகுளம், சீலாத்திகுளம், திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குளம், காரிகோவில், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, சுவிசேஷபுரம், நந்தன்குளம், ஆயன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் ராஜன்ராஜ் தெரிவித்துள்ளார்.

ராதாபுரம்

ராதாபுரம் துணை மின்நிலையத்தில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராதாபுரம், பெத்தரெங்கபுரம், கால்கரை, கோலியான்குளம், தனக்கர்குளம், பரமேசுவரபுரம் மற்றும் தனியார் காற்றாலை பண்ணைகளுக்கும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, நெல்லை காற்றாலை பண்ணை திட்ட செயற்பொறியாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story