ஊட்டியில் வருகிற 15-ந்தேதி தொடக்கம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பகுதிநேர கலை பயிற்சி முன்பதிவு செய்து பயன்பெறலாம்


ஊட்டியில் வருகிற 15-ந்தேதி தொடக்கம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பகுதிநேர கலை பயிற்சி முன்பதிவு செய்து பயன்பெறலாம்
x
தினத்தந்தி 8 July 2018 4:15 AM IST (Updated: 8 July 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்கு பகுதி நேர கலை பயிற்சிஊட்டியில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதில் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஊட்டி,

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-


தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கலைகளை பயிலும் வண்ணம் பகுதி நேர கலை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஜவகர் சிறுவர் மன்றம் ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

இந்த மன்றத்தில் குரலிசை (வாய்பாட்டு), கீ-போர்டு, பரதநாட்டியம் மற்றும் ஓவியம் ஆகிய கலைகள் சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இந்த பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.400 மட்டும் செலுத்த வேண்டும். வருகிற 15-ந் தேதி தொடங்கும் பயிற்சிகள் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் இறுதி வரை நடைபெறும்.


சிறுவர் மன்றத்தில் உறுப்பினராக பயிற்சி பெறும் சிறார்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். வருகிற 11-ந் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்கப்பட உள்ளது. முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9442147606, 9943433742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story