மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது + "||" + Anne Brahmotsavam festival started with the flag on the temple at Thiruvannamalai Arunasaleswarar

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதற்கான கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,

பஞ்சபூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்களிலும், விஷேச நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் நகர் முழுவதும் கூட்டம் அலைமோதும்.

இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி காலை சுமார் 6.55 மணிக்கு கொடியேற்றப்பட்டது. முன்னதாக சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்பாள் மற்றும் பராசக்தி அம்மன், விநாயகர் வீதி உலா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையிலும், மாலையிலும் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீவில்லிபுத்தூரில் எச்.ராஜாவை கண்டித்து கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
இந்து சமய அறநிலையத் துறைப் பணியாளர்களை. தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் எச்.ராஜா அவதூறாகப் பேசியதைக் கண்டித்து ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு கோயில் பணியாளர்கள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கோவில் திருவிழாவில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
பாந்திரா மலை மாதா கோவில் திருவிழாவில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
3. கோகுல்ராஜின் தோழி திடீர் பல்டி: மாணவி கோவிலுக்கு வந்ததை நிரூபிப்போம் - அரசு வக்கீல்
கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மாணவி கோவிலுக்கு வந்ததை நிரூபிப்போம் என அரசு வக்கீல் கூறினார்.
4. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் எடுத்து சென்ற உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் நடந்து வருகின்றன.
5. போலி ஆவணங்கள் மூலம் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற மதுரை செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் 6 பேர் பணி நீக்கம்
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.50 கோடி நிலத்தை விற்பனை செய்த மதுரை செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் 6 பேரை பணி நீக்கம் செய்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.