மாவட்ட செய்திகள்

58 கிராம நீர்பாசன தொட்டிப் பாலத்தில்பள்ளி மாணவர்கள் மழை வேண்டி பிரார்த்தனை + "||" + 58 village irrigation tank bridge Pray for prayers for school students

58 கிராம நீர்பாசன தொட்டிப் பாலத்தில்பள்ளி மாணவர்கள் மழை வேண்டி பிரார்த்தனை

58 கிராம நீர்பாசன தொட்டிப் பாலத்தில்பள்ளி மாணவர்கள் மழை வேண்டி பிரார்த்தனை
மழை வேண்டி 58 கிராம நீர்பாசன தொட்டிப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதி மிகவும் வறட்சியான பகுதி. இந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியாகும். இந்த நிலையில் மழைகாலங்களில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் உபரியாக வெளியேற்றப்படும் நீரை உசிலம்பட்டி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கால்வாய் அமைக்க முன்னாள் எம்.எல்.ஏ. வல்லரசு முடிவெடுத்து அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.


அதன் பலனாக சுமார் ரூ.86 கோடி மதிப்பில் 58 கிராம கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்பொழுது மழைகாலம் என்பதால் வைகை அணைக்கு 60 அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் தான் 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்தநிலையில் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி மாணவர்கள் 58 கிராம கால்வாய் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டி பாலத்தை பார்த்தனர்.

இந்த பகுதி மக்களின் ஜீவாதாரமாக உள்ள தொட்டிப்பாலத்தில் மாணவர்கள் அமர்ந்து இந்த வருடம் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். இதில் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு, ஆசிரியர்கள், 58 கிராம கால்வாய் திட்ட பாசன சங்க நிர்வாகிகள் சிவபிரகாஷ், முனியாண்டி, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மழைவேண்டி பள்ளி மாணவ மாணவிகள் பிரார்த்தனை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களின் மனதை நெகிழச் செய்தது.