உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து இன்று கருத்து தெரிவிப்பேன் கவர்னர் கிரண்பெடி பேட்டி


உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து இன்று கருத்து தெரிவிப்பேன் கவர்னர் கிரண்பெடி பேட்டி
x
தினத்தந்தி 8 July 2018 4:00 AM IST (Updated: 8 July 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நாளை (இன்று) கருத்து தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர்களிடம், அலுவலகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் தற்போது நான் தூய்மை பணிக்கும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இன்று (நேற்று) நான் மின்துறையில் தூய்மை பணி குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். நான் அவர்களிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளேன். இதே போல் தூய்மை பணி தொடர வேண்டும் என்று கூறியுள்ளேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நாளை (இன்று) கருத்து தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story