பைகுல்லா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பென்குயின் பறவை முட்டையிட்டது
பைகுல்லா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பென்குயின் பறவை முட்டையிட்டது.
மும்பை,
பைகுல்லா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பென்குயின் பறவை முட்டையிட்டது.
மும்பைக்கு வந்த பென் குயின்கள்
மும்பையில் உள்ள பைகுல்லா உயிரியல் பூங்கா சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு தென் அமெ ரிக்கா நாட்டில் இருந்து 7 பென் குயின் பறவைகள் வாங்கப்பட்டது.
குளிர்பிரதேசத்தில் மட்டுமே வாழும் பென் குயின் பறவைகளுக்கு ஏற்ப மும்பையில் தட்ப வெட்ப நிலை இல்லை என்ப தால் அந்த பென் குயின்களை பராம ரிக்க பல லட் சம் ரூபாய் செலவில் தனியாக வசிப்பி டம் உருவாக்கப்பட் டது.
இருப்பி னும் இந்த பென்குயின்களில் ஒன்று உயிரிழந்தது. இத னால் விலங்கு கள் நல ஆர்வலர்கள் மும்பையில் பென்குயின்களை வளர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதுகாப்பாக வைக்கப்பட்டது
பைகுல்லா உயிரியல் பூங்காவை சேர்ந்த நிர்வாகிகள் அவர்க ளின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் பென்குயின்களை தொடர்ந்து பராமரித்து வந்தனர். இதற்கு இப்போது தக்க பலன் கிடைத்துள்ளது.
தற்போது பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பென்குயின்களில் பிலிப்பர் என்று பெயரிடப்பட்ட பென்கு யின் பறவை நேற்று முன்தி னம் மாலை முட் டையிட் டது.
ஒரு முறை கருத்தரித்தால் 2 முறை முட்டையிடும் தன்மை கொண்ட இந்த பென்குயின் பறவை விரைவிலேயே மற் றொரு முட்டையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பென்குயின் பறவையிட்ட முட்டையை உயிரியல் பூங்கா டாக்டர்கள் பாதுகாப் பாக வைத்துள்ளனர். இந்த முட்டை குஞ்சு பொறித்தால் இந்தியாவில் பிறக்கும் முதல் பென்குயின் பறவை என்ற புகழை பெறும்.
இந்தியாவில் வேறு எந்த உயிரியல் பூங்காவி லும் பென்குயின் பறவை கள் வளர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story