மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; தொழிலாளி சாவு + "||" + Motorcycles encounter; Worker Death

மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; தொழிலாளி சாவு
விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சங்கர் (வயது 42), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்டுரோட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். பனையபுரம் கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரப்பாக்கத்தில் இருந்து முண்டியபாக்கம் நோக்கி எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், சங்கர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் சங்கர் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மதுரப்பாக்கத்தை சேர்ந்த முருகன் மகன் சுதாகர்(32) என்பவரும் பலத்த காயமடைந்தனர்.

இதைபார்த்த அந்த வழியாக வந்தவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். சுதாகருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.