சட்டசபை கூட்டம் நிறைவடைந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் வாரிய தலைவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்

சட்டசபை கூட்டம் நிறைவடைந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் வாரிய தலைவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்
x
தினத்தந்தி 9 July 2018 3:30 AM IST (Updated: 9 July 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வாரிய தலைவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வாரிய தலைவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

நன்றி தெரிவித்தார்

கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னர், பரமேஸ்வர் அந்த பதவியில் 8 ஆண்டு காலம் நீடித்தார். தற்போது அவர் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் பதவியில் தன்னை நீண்ட காலம் அமர வைத்த கட்சி மேலிட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க பரமேஸ்வர் டெல்லி சென்றார்.

அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்த பரமேஸ்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது ராகுல் காந்தியுடன், பரமேஸ்வர் கூட்டணி அரசு குறித்து ஆலோசனை நடத்தினார். ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லாமல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ராகுல் காந்தி, பரமேஸ்வருக்கு அறிவுறுத்தினார்.

ராகுல் காந்தி உத்தரவு

மேலும் மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் வாரிய தலைவர்கள் நியமனத்தை சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் மேற்கொள்ளுமாறு ராகுல் காந்தி உத்தரவிட்டார். அதற்கு முன்னதாக மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தி பட்டியலை இறுதி செய்யும்படி பரமேஸ்வருக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டார்.

Next Story