மாவட்ட செய்திகள்

நாகூர் அருகே, டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்தது; 7 பேர் காயம் சென்னையை சேர்ந்தவர்கள் + "||" + Near the Nagur, the car collapsed because the tire erupted; 7 people were injured in Chennai

நாகூர் அருகே, டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்தது; 7 பேர் காயம் சென்னையை சேர்ந்தவர்கள்

நாகூர் அருகே, டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்தது; 7 பேர் காயம் சென்னையை சேர்ந்தவர்கள்
நாகூர் அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 7 பேர் காயம் அடைந்தனர்.
நாகூர்,

சென்னை விஜயபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் அரவிந்த் (வயது25). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அரவிந்த் ஓட்டி வந்துள்ளார். அப்போது நாகூர் அருகே பூதங்குடி என்ற இடத்தில் சென்றபோது திடீரென காரின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார், சாலையின் ஓரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.


இந்த விபத்தில் காரில் வந்த 7 பேர் காயம் அடைந்தனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். மேலும், தகவல் அறிந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.