நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்


நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்
x
தினத்தந்தி 9 July 2018 10:00 PM GMT (Updated: 9 July 2018 8:25 PM GMT)

நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி நடப்பதாக விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பலர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

விருதுநகர்,

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அப்துல்நாசர் உள்ளிட்ட பலர் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், “ராஜபாளையம் ஆசில்லாபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மீனா, வெம்பக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கியம்மாள், ராஜபாளையத்தை சேர்ந்த சங்கர நாராயணன், வீரப்பன் ஆகிய 7 பேரை இயக்குனராக கொண்டு ராஜபாளையத்தை தலைமையிடமாக கொண்ட நிதி நிறுவனம் அம்பாசமுத்திரத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பலரிடம் முதலீடு பெற்றனர். அதற்கான பத்திரமும் வழங்கி உள்ளனர். ஆனால் முதிர்ச்சி அடைந்த டெபாசிட் பத்திரங்களுக்கு பணப்பட்டுவாடா எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த 26.2.2018 அன்று இந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் டெபாசிட் பெற்று ஏமாற்றி தலைமறைவாகி விட்டனர். எனவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு முதலீடு பணம் கிடைப்பதற்கு உதவிட வேண்டுகிறோம்.” என்று கூறியிருந்தனர். இது பற்றி விசாரணை நடத்தி பொருளாதார குற்றப்பிரிவு உயரதிகாரியின் அனுமதியின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story