மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு + "||" + Failure to try to fire with the family at the Collector's office premises

கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு
நாமக்கல்லில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,

மோகனூர் அருகே உள்ள அரூரை சேர்ந்த ராமசாமி மகன் விஸ்வநாதன். மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், சபீனா, நாகேஷ்வரி என 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையே நேற்று குடும்பத்துடன் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த விஸ்வநாதன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாட்டர் கேனில் இருந்த மண்எண்ணெயை மேலே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.


அப்போது விஸ்வநாதன், சிறிது அளவு மண்எண்ணெயை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்று விஸ்வநாதனிடம் இருந்த கேனை பறிமுதல் செய்ததோடு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து விஸ்வநாதன் மற்றும் குடும்பத்தினரை நல்லிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அருகாமை வீட்டில் குடியிருந்து வருபவர் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, அடித்து துன்புறுத்துவதாக விஸ்வநாதன் போலீசாரிடம் புகார் கூறி உள்ளார். மேலும் இதன் காரணமாகவே இன்று (நேற்று) தான் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக மாற்றுத்திறனாளி விஸ்வநாதனின் மனைவி கஸ்தூரி மீது நல்லிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை வசுந்தராதாசை மானபங்கம் செய்ய முயற்சி - தலைமறைவான டிரைவருக்கு வலைவீச்சு
கார் செல்ல வழி விடாததால் நடிகை வசுந்தராதாசுடன் தகராறு செய்து, அவரை மானபங்கம் செய்ய முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
2. திருவரங்குளத்தில் ஒரே நாள் இரவில் 2 கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபரால் பரபரப்பு
திருவரங்குளத்தில் ஒரே நாள் இரவில் 2 கோவில்கள் உள்பட 4 இடங்களில் வாலிபர் திருட முயன்றார். அப்போது போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தி.மு.க. பிரமுகரை கொல்ல முயற்சி: மர்ம கும்பலை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கூத்தாநல்லூர் அருகே தி.மு.க. பிரமுகரை கொல்ல முயன்ற மர்ம கும்பலை கைது செய்யக்கோரி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. வரதட்சணை கேட்டு பெண்ணை எரித்துக்கொல்ல முயற்சி கணவர் குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
திருவாரூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை எரித்துக்கொல்ல முயன்றதாக கணவர் குடும்பத்தினர் மீது பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. ஹெல்மெட் அணியாததால் அபராதம்: போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற இலங்கை அகதி சிறையில் அடைப்பு
பெரம்பலூரில் ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற இலங்கை அகதியை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.