2 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைக்கு வந்த சகன் புஜ்பால்
சிறைவாசம் அனுபவித்து வந்த சகன் புஜ்பால் 2 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைக்கு வந்தார்.
நாக்பூர்,
முன்னாள் துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சகன் புஜ்பால், பண மோசடி வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பலமுறை அவர் மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்தநிலையில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு அவருக்கு கடந்த மே மாதம் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. பின்னர் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிகிச்சை பெற்ற அவர் தற்போது உடல்நலம் தேறியுள்ளார்.
இந்தநிலையில் நாக்பூரில் நடந்துவரும் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அவர் கலந்துகொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கைகுலுக்கி வரவேற்றனர். நேற்று சட்டசபை அலுவல்களில் உற்சாகத்துடன் செயல்பட்ட அவர், ரிலையன்ஸ் மின் நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு நிலுவை தொகையை செலுத்தாமல் உள்ள பிரச்சினை, உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சட்டசபை கூட்டத்தில் பேசினார்.

Related Tags :
Next Story