மாவட்ட செய்திகள்

தென்காசி நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் + "||" + In the office of Tenkasi municipality The public darna fight

தென்காசி நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

தென்காசி நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
தென்காசி நகரசபை அலுவலகத்தில் தென்காசி நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி, 

தென்காசி நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தென்காசி 26–வது வார்டு மாதாங்கோவில் 1–ம் தெருவில் நகரசபை கட்டுப்பாட்டின் கீழ் கடந்த 2 ஆண்டுகளாக பொது கழிப்பறை இயங்கி வந்தது. கடந்த சில நாட்களாக இந்த கழிப்பறை பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்று மூடப்பட்டது. ஆனால் அங்கு பராமரிப்பு பணி எதுவும் நடைபெறவில்லை என்றும், உடனடியாக கழிப்பறையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நகரசபை அலுவலகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாகுல் அமீது பாட்ஷா, ராஜா முகம்மது, அகில இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மைதீன் பிச்சை, செயலாளர் திவான் ஒலி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

கோரிக்கை மனு

பின்னர் பொதுமக்கள் நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) தாணு மூர்த்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.