மாவட்ட செய்திகள்

கிராம வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 23–ந் தேதி தொடங்குகிறது + "||" + Thiruchendur Sivanthi Academy Training courses Starts on 23rd

கிராம வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 23–ந் தேதி தொடங்குகிறது

கிராம வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 23–ந் தேதி தொடங்குகிறது
கிராம வங்கிகளின் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

திருச்செந்தூர், 

கிராம வங்கிகளின் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 23–ந் தேதி தொடங்குகிறது.

அலுவலக உதவியாளர் பணி

கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11, 12, 18, 19, 25 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது.

இத்தேர்வு பற்றிய விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம். இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் 2.7.2018 தேதிக்குள் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

பயிற்சி வகுப்புகள்

பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகிற 23–ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6–ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3,500 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

தங்கும் வசதி

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான 23.7.2018 அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர...

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ–மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம், ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3,500–க்கான டிமான்ட் டிராப்ட் (டி.டி) (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்–628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 18–ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

மேலும் தகவல்களுக்கு...

மேலும் தகவலுக்கு 04639–242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.