மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் காசநோய் கண்டறியும் விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார் + "||" + Tuticorin Tuberculosis Awareness Vehicle Collector Sandeep Nanduri started

தூத்துக்குடியில் காசநோய் கண்டறியும் விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் காசநோய் கண்டறியும் விழிப்புணர்வு வாகனம் 
கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் காசநோய் கண்டறியும் நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் காசநோய் கண்டறியும் நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

காசநோய் கண்டறியும் வாகனம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசநோய் கண்டறியும் மற்றும் விழிப்புணர்வு நடமாடும் வாகனம் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு, வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது;–

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சிறப்பான முறையில் காசநோய் கண்டுபிடிக்கப்பட்டு இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஆண்டுதோறும் 1 முதல் 2 சதவீதம் வரை காசநோயின் தாக்கம் குறைந்து வருகின்றது. காசநோயை துரிதமாக கண்டுபிடிக்க ‘சீபிநாட்‘ என்னும் கருவி அதிகளவில் பயன்படுத்தப்பட உள்ளது.

கோவில்பட்டி ஆஸ்பத்திரி

2 மணி நேரத்தில் காசநோயை கண்டறியும் இந்த கருவி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் செயல்பாட்டில் உள்ளது. ‘சீபி நாட்‘ கருவியின் பயன்பாடு மற்றும் காசநோய் பற்றிய விழிப்புணர்வினை தமிழக மக்கள் அறிந்திடும் வகையில் மத்திய காசநோய் பிரிவு சார்பில் நடமாடும் ‘சீபிநாட்‘ ஆய்வு கூட வாகனம் நமது மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வாகனமானது தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களை கடந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இந்த வாகனமானது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) வடக்கு திட்டக்குளம் மற்றும் இளம்புவனம் கிராமங்கள், 12–ந் தேதி திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஏரல், தோழப்பன்பண்ணை, தலைவன்வடலி, கீரனூர், புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனை, ஆனந்தபுரம் கல்வாரி விடுதி, மெஞ்ஞானபுரம் சத்யா நகர் பகுதிகளுக்கும், 13–ந் தேதி முடுக்கலாங்குளம், கோவில்பட்டி நகர்புறம், கீழவைப்பார், குளத்தூர், நீராவிபுதுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், 14–ந் தேதி தூத்துக்குடி ராமதாஸ்நகர், ஆரோக்கியபுரம், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்.நகர், எஸ்.எம்.புரம் மற்றும் தருவைகுளம் சமத்துவபுரம் பகுதிகளுக்கும் செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, இணை இயக்குனர் (நலப்பணிகள்) பரிதா ஜெரின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ராம்சுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, சுந்தரலிங்கம், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

1. தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்; கலெக்டர் அறிவுரை
தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
2. கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஆதிதிராவிட மக்கள் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை -கலெக்டர் தகவல்
ஆதிதிராவிட மக்கள் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
4. கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
கிராமப்பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதுடன் அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
5. தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா
தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.