மாவட்ட செய்திகள்

கடைகள், வணிக நிறுவனத்தினர் குப்பைகளை சாலையில் தூக்கி வீசினால் அபராதம் விதிக்கப்படும் + "||" + Shops and business firms will be fined if they throw garbage on the road

கடைகள், வணிக நிறுவனத்தினர் குப்பைகளை சாலையில் தூக்கி வீசினால் அபராதம் விதிக்கப்படும்

கடைகள், வணிக நிறுவனத்தினர் குப்பைகளை சாலையில் தூக்கி வீசினால் அபராதம் விதிக்கப்படும்
கடைகள், வணிக நிறுவனத்தினர் குப்பைகளை சாலையில் தூக்கி வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கடை மற்றும் வணிக நிறுவனங்கள், மளிகை, பெட்டிகடைகள், ஓட்டல்கள், கடைவீதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடை மற்றும் நிறுவனங்களில் சேரும் குப்பைகளை சாலையில் தூக்கி வீசாமல் நகராட்சி வாகனம் வரும்போதோ அல்லது துப்புரவு பணியாளர் களிடமோ குப்பைகளை சேகரித்து வைத்து கொடுத்து நகரின் தூய்மை காக்க உதவ வேண்டும்.


மேலும் உரிமையாளர்கள் தாங்கள் கடை மற்றும் நிறு வனங்களின் முன்பு குப்பைகள் போடுவதற்கான ஒரு பேரல் அல்லது பக்கெட்டுகளை வைத்து அதில் அன்றாட சேரும் குப்பைகளை சேகரிக்க வேண்டும். பின்னர் அதனை நகராட்சி வாகனம் வரும் நேரத்தில் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு இல்லாமல் நீங்கள் சாலையில் தூக்கி வீசப்படும் காகிதம், பாலித்தீன் பைகள், அட்டைகள் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் சென்று அது மற்றவர் வீடு மற்றும் கடைகளில் உள்ளே சென்று சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் மட்டுமல்லாமல் சாக்கடை வாய்க்காலில் விழுந்து தேக்கத்தை ஏற்படுத்தி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே நகரை தூய்மை காக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும் ரோட்டில் குப்பைகளை போட கூடாது என்பதற்காக அனைத்து கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்னர் கண்காணிக்கபடும். அதனை மீறி குப்பைகளை சாலையில் தூக்கி வீசும் பட்சத்தில் அந்த கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.