மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு + "||" + The door of the house near the Kovilpatti broke and jewelery-money theft

கோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

கோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
கோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் உடையார். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மேரி (வயது 45). இவர் சிவந்திப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

நேற்று காலையில் மேரி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் உடையார் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் உடையாரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

மதியம் வீட்டுக்கு திரும்பி வந்த உடையார் தனது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள், பணம் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணத்தை திருடியவர்களை வலைவீசி தேடி வருகிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. பூ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு
திருப்பத்தூரில் பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
ஆம்பூர் அருகே செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு
உறவினருடன் காரில் வந்த வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 16 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. தாய், மகளை கட்டிப்போட்டு ரூ.62 லட்சம் நகை, பணம் கொள்ளை
கூரியர் நிறுவன ஊழியர்கள் போல் நடித்து, வீடு புகுந்த வாலிபர்கள் தாய், மகளை கட்டிப்போட்டு ரூ.62 லட்சம் நகை, பணத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
5. ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது
உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்கார வாலிபர் கைது செய்யப்பட்டார்.