மாவட்ட செய்திகள்

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மீதான ஆட்சேபனை குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் + "||" + All party counseling on objection to draft polling list

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மீதான ஆட்சேபனை குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மீதான ஆட்சேபனை குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்
வரைவு வாக்குச் சாவடி பட்டியல் மீதான ஆட்சேபனை குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்து வெளியிட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மீது உள்ள ஆட்சேபனை அல்லது கூற்றுகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இறுதி செய்யும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏற்கனவே கடந்த 2-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் குன்னம் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களின் மீது ஆட்சேபணை அல்லது கூற்றுகள் ஏதும் பெறப்படவில்லை. அவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தினரால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் புதிதாக 10 வாக்குச் சாவடி மையங்களும், குன்னம் தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமாக 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் 15 வாக்குச்சாவடி மையங்களும், கட்டிடத்திற்கு புதிய பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையத்தின் ஒரு பகுதி மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இணைக்கப்பட்டது தொடர்பாக 8 வாக்குச்சாவடி மையங்களும் புதிதாக உருவாக்கப்பட்டன. அவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் வட்டாட்சியர்கள் பலர் கலந்து கொண்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி முதல் அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன்; பொன். ராதாகிருஷ்ணன்
மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி முதல் அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. தஞ்சை மாநகரில் புதிதாக வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது
தஞ்சை மாநகரில் இந்த ஆண்டு புதிதாக வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கூறினார்.
3. அமராவதி ஆற்று உபரிநீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூர் அமராவதி ஆற்று உபரிநீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
4. கரூர் மாவட்ட மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு கூட்டம்
கரூர் மாவட்ட மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
5. பரமத்திவேலூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
பரமத்திவேலூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.