மாவட்ட செய்திகள்

11 தாசில்தார்கள் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு + "||" + 11 Thalisthars transferred Collector's order

11 தாசில்தார்கள் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு

11 தாசில்தார்கள் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு
மாவட்டத்தில் பணிபுரியும் 11 தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து கலெக்டர் லதா உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை,

இடமாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு:–

சிவகங்கை மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த ராஜா, சிவகங்கை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு இருந்த கந்தசாமி, சிவகங்கை பறக்கும் படை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பணியிடத்தில் இருந்த பாலகுரு, காளையார்கோவில் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்த தங்கமணி, திருப்பத்தார் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலகிருஷ்ணன், திருப்பவனம் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். காளையார்கோவில் தாசில்தாராக இருந்த சந்தானலட்சுமி, தேவகோட்டை கோட்ட ஆய அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பத்தூர் தாசில்தாராக இருந்த சுமதி என்ற சுதந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவிஉயர்வு பெற்ற சிங்கம்புணரி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அந்தோணிராஜ், சிவகங்கை வருவய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டார். பதவி உயர்வு பெற்ற ஒக்கூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜரத்தினம், விருதுநகர் முத்திரைதாள் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற சிவகங்கை தேர்தல் பிரிவு தனி துணை வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியன், சிவகங்கை கலெக்டர் அலுவலக அகதிகள் பிரிவு தனி துணை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற தேவகோட்டை மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்கவாசகம், மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.